நாடி ஜோதிட காண்டங்கள்

பொது காண்டம்:

ஆண்களின் வலது கை பெருவிரல் ரேகை மற்றும் பெண்களின் இடது கை பெருவிரல் ரேகையை கொண்டு பின்வரும் பன்னிரண்டு காண்டங்களின் விபரங்களை பொதுவாக கூறுவது பொதுகாண்டமாகும் மற்ற காண்டங்களின் பலன்களை தனித்தனியாக விரிவாக விளக்கமாக தெரிந்து கொள்வதற்கு முன் இந்த பொது காண்டத்தை பார்த்து கொண்ட பிறகுதான் மற்ற காண்டங்களை பார்க்க இயலும் என்பது ஓலைச்சுவடியின் விதி.

2 வது காண்டம்:

ஆரம்ப கல்வி செல்வாக்கு மிகுந்த வாழ்க்கை அமையுமா என்பதையும் குடும்ப வாழ்க்கை மற்றும் அதில் ஏற்படும் நன்மை தீமைகள் கண்களில் ஏற்படும் நோய்கள் பேச்சுத்திறன் மற்றும் வாக்குபலிதம் மனைவியின் ஆயுள் மிகுந்த அளவில் செல்வம் சேரும் யோகம் உண்டா என்பதையும் விலை மதிப்பு மிக்க பொருட்கள் சேர்க்கும் யோகம் உண்டா என்பதையும் சகல தன பாக்கியங்களுடன் நிலையான குடும்ப வாழ்க்கையை பற்றி கூறுவது மற்றும் நிலையான வருமானம் அமையுமா மற்றும் வாழ்க்கையில் அதிக வருமானம் அமையும் யோகம் உண்டா பண வரவு இடையில் ஏற்படும் தடைகள் அதாவது வருமானம் இல்லாத நிலை அல்லது நிலையற்ற வருமான அமைப்பு அல்லது உயர்வான வருவாய் யோகம் இவைகளை கூறுவது.

3 வது காண்டம்:

தைரியம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையுமா ஆற்றல் (வீரியம்) தீராத காது நோய்கள் பணியாட்கள் மற்றும் பணியாட்கள் பலரை வைத்து வேலை வாங்கும் யோகம் பணியாளர்களால் ஏற்படும் லாபம் மற்றும் தீமைகள் பொறுமை குணம் தந்தையின் ஆயுள் நிலை இளைய சகோதர சகோதரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களால் ஏற்படும் நன்மை தீமைகள் சங்கீத புலமை சிறிய வாகனங்கள் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு துறையில் முன்னேறும் யோகம் இவைகளை கூறுவது.

4 வது காண்டம்:

பட்ட படிப்பு மற்றும் சிறப்பு கல்வி தகுதி எந்த துறையில் படித்தால் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் உயர்வான நிலை அடையலாம் என்பதை கூறுவது தாயாரின் உடல்நிலை நன்மை தீமைகளை கூறுவது வீடுமனை யோகம் வாகன யோகங்கள் சுக போகமான மகிழ்ச்சியான வாழ்க்கை மனைவிக்கு அமையும் தொழில்களை பற்றி கூறுவது சொந்த வீடு கட்டும் யோகம் உண்டா அல்லது பிறரது வீட்டில் (வாடகை வீடு) வாழும் யோகம் உண்டா மற்றும் இதய நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் கிடைக்குமா பெரும் பூமிக்கு உரிமையளராய் இருக்கும் யோகம் நண்பர்களால் அனுகூலம் மற்றும் தீமைகள் தாய் வழி உறவினர்களால் ஏற்படும் நன்மை தீமைகள் மன நிம்மதி மற்றும் சுபகாரியங்கள் செய்யும் யோகம் சுயமாக கற்ற தொழில்களால் கிடைக்கும் லாபங்கள் பற்றி கூறுவது.

5 வது காண்டம்:

குழந்தைகள் பிறப்பு புத்திரர்கள் வழி நன்மைகள் குழந்தைகள் இல்லாததற்கு காரணம் தீர்வுகளைக் கூறுவது மற்றும் வயிறு சார்ந்த நோய்கள் அறிவு கூர்மை காதலில் வெற்றி அடையும் யோகம் பூர்வீக சொத்துக்கள் வழி நன்மை தீமைகள் கலைகள் மீதுள்ள ஆர்வம் வாழ்க்கையில் பெரும் புகழ் அடையும் யோகம் குழந்தைகள் எதிர்கால வாழ்க்கையை பற்றி கூறுவதுமேலும் நிலையான பேர் புகழ் அடையும் நிலையை பற்றி கூறுவது.

6 வது காண்டம்:

தாய் மாமன் மற்றும் அவர்களின் வழி நன்மை தீமைகள் வாழ்க்கையில் ஏற்படும் நோய்கள் விரோதி நீதி மன்ற வழக்குகள் மர்ம நோய்கள் கடன் எதிரிகள் வழி தொல்லைகள் நீங்கும் வழிகள் ஆயுதங்களால் காயம் பங்காளிகள் வழி ஏற்படும் பகைகள் திருடர் பயம் நீர் வழி கண்டம் காரிய தடை ஏற்படுதல் அது நீங்கும் வழிகள் தீயோர் நட்பாய் ஏற்படும் தொல்லைகள் போட்டி தேர்வுகள் மற்றும் பந்தயம் போன்றவற்றில் வெற்றி ஏற்படுமா உத்யோகத்தில் நன்மை தீமைகள் மற்றும் எதிரிகளை வெல்லும் யோகம் உண்டா நோய்களிலிருந்து விடுபடும் நிலை உண்டா என கூறுவது.

7 வது காண்டம்:

திருமணம் நடக்கும் காலம் திருமணம் காலத்தாமதமாவதற்கான காரணங்கள் மேலும் திருமண யோகம் உண்டா இல்லையா என்பதையும் எந்த திசையில் எப்படிப்பட்ட வரன் அமையும் என்பதையும் மேலும் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா திருமணம் ஆனவர்களுக்கு கணவன் அல்லது மனைவியுடன் கூடிய மணவாழ்வில் பலன்களை கூறுவது மற்றும் ஞாபகமறதி எதிர்காலத்தில் அமையும் மனைவி அல்லது கணவனுடைய உருவத் தேற்றம் குணம் கல்வி உத்தியோகம் விபரங்கள் தொழில் கூட்டாளி கள் அவர்களாள் ஏற்றப்படும் நன்மை தீமைகள் வெளிநாட்டில் வாழும் யோகம் யாத்திரை செல்லுதல் பரிசுகள் எதிர்பாலினத்தினரால் ஏற்ப்படும் நன்மை தீமைகள் மேலும் கூட்டுத்தொழில் செய்யும் யோகம் இவைகளை கூறுவது.

8 வது காண்டம்:

ஆயுளைப் பற்றி எத்தனை வயது வரை உயிர் வாழும் யோகம் உண்டு‌ என்பதை யும் இடையில் ஏற்ப்படும் கண்டங்கள் விபத்துகள் இன்சூரன்ஸ் வழி கிடைக்கும் லாபங்கள் உயரமான இடத்தில் இருந்து தவறி விழும் நிலை தீராத நீண்ட கால நோய்கள் அதற்கான தீர்வுகளை கூறுவது பெண்களின் மாங்கல்ய பாக்கிய யோகம் நஷ்ட்ட ஈடு பெறுதல் அல்லது கொடுத்தல் திடீர் விபத்து கடன்களால் தொல்லை காரியத்தில் தொடர் தடைகள் தீராத மனகவலைகள் அதற்கான தீர்வுகள் பொருள் காணமல் போகுதல் மற்றும் குடும்ப வாழ்க்கையை விட்டு இடையில் சன்யாச வாழ்வு ஏற்படும் நிலை அறுவை சிகிச்சை அல்லது தொடர் அறுவை சிகிச்சை ஏற்படும் நிலை அதற்கான தீர்வுகள் மறைமுக நோய்கள் அல்லது தொற்று நோய் வழி பாதிப்பு மற்றும் தீர்வுகள் வீண் பழி அடையு ம் நிலை வாகன விபத்துகள் ஆயுள் முடியும் இடம் ஆயுள் முடிவதற்கான காரணங்கள் எதிர்பாராத அதிஷ்டம் மேலும் மறைந்துள்ள பொருளாள் தீடீர் லாபம் இவைகளை கூறுவது.

9 வது காண்டம்:

தகப்பனார் வழி செல்வ யோகம் ஆலய தரிசனம் குருவினிடம் உபதேசம் பெறுதல் புண்ணிய காரியங்கள் தீர்த்த யாத்திரை செல்லுதல் தவம் செய்து சக்தி பெறுதல் ஆராய்ச்சி சார் கல்வி யோகம் முதுநிலைப் பட்டம் அமையும் யோகம் ஆராய்ச்சி சார் கல்வியில் கிடைக்கும் வெற்றி அதிஷ்டம் தந்தைவழியில் சொத்துக்கள் கிடைக்கும் யோகம் ஆலயங்கள் மற்றும் அறக்கட்டளை சார்ந்த நிர்வாக பதவிகள் குருவின் நிலையை அடைதல் பொது சேவையில் ஈடுபாடு மற்றும் வெற்றி அடைதல் ஆன்மீக வாழ்கையில் ஈடுபாடு ஆராய்ச்சி மூலம் புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் யோகம் ஞானம் பெறுதல் மற்றும் ஞானத்தை பற்றிய ஆராய்ச்சி அறிவு பொது சேவை சார்ந்த நிறுவனத்தை உருவாக்கி அதில் தலைமை வகித்தல் ஆன்மீக வாழ்கையில் அடையும் மேன்மை ஆன்மீக வாழ்கையில் முன்னேற்றத்திற்கு சரியான குரு அமையும் யோகம் நீதி நேர்மை மாறாத வாழ்கை முறை இறை பக்தி மற்றும் இறை காட்சி கிடைக்கும் யோகம் தீட்சை பெறும் யோகம் பலருக்கும் உபதேசம் செய்தல் அதிஷ்ட்ட நிறம் அதிஷ்ட்ட எண்கள் அதிஷ்ட்ட நாள் அதிஷ்ட்ட திசைகள் அதிஷ்ட்ட கிழமை மாதம் ஆண்டு கடவுள் மேலும் முழுமையான தெய்வ அருள் கிடைக்க எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதையும் அதனால் அடையும் பலன்களையும் கூறுவது.

10 வது காண்டம்:

ஜாதகருக்கு அமையும் தொழில் வியாபாரம் உத்தியோகம் நிலையான உத்தியோகம் அல்லது தொழில் அமையுமா அரசு வேலை கிடைக்கும் யோகம் பற்றியும் உத்தியோகம் அல்லது தொழிலில் இடையில் ஏற்ப்படும் பிரச்சினைகள் எந்த விதமான தொழில் அல்லது உத்தியோகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதையும் அரசாங்கத்தில் உயர் பதவி அமையும் யோகம் அரசியல் சார்ந்த பதவிகள் தந்தைக்கு கர்மா செய்யும் யோகம் உண்டா அதாவது அவருக்கு பின் அவருக்கு செய்யும் சிரார்த்தம் பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகித்தல் மற்றும் அறப்பணிகள் செய்தல் அரசாட்சி புரியும் யோகம் பற்றியும் உயர் புகழ் அடையும் யோகம் இளமை தோற்றம் அடைய உண்ணும் மருந்துகள் அதனால் வெற்றி கிடைக்குமா என்பதையும் குடும்ப வாழ்க்கையை விட்டு பின் சன்யாசம் மேற்கொள்ளுதல் சொந்த நாட்டில் தொழில் செய்து மிகுந்த லாபம் அடையும் யோகம் இஷ்ட்ட தெய்வங்கள் மந்திர உபதேசத்தாள் லாபம் விவசாயத்தில் லாபம் அடையும் யோகம் சகோதரனுக்கு ஏற்படும் கண்டங்கள் அதிகார பதவி செல்வாக்கு இவைகளை கூறுவது.

11 வது காண்டம்:

இளைய மனைவி இரண்டாவது திருமண யோகம் உண்டா என்பதையும் இரண்டாவது திருமணம் அமையும் காலம் மற்றும் வரனின் (ஆண்-பெண்) விபரங்கள் அதனால் அடையும் நன்மை தீமைகள் மற்றும் மூத்த சகோதர சகோதரிகளின் பலன்களை கூறுவது முழங்கால் நோய் மற்றும் தீர்வுகள் பல வழிகள் மூலம் கிடைக்கும் லாபங்கள் பல விதமான வருமானம் அமையும் யோகம் தாய்க்கு ஏற்படும் கண்டங்கள் எளிமையான வழியில் வரும் லாபங்கள் உயர் ரக வாகன வசதி பொருள் சேர்க்கும் திறமைகள் இவைகளை கூறுவது.

12 வது காண்டம்:

வெளிநாட்டில் வேலை பார்க்கும் யோகம் மேலும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டா அதில் ஏற்படும் தடைகள் அதற்கான தீர்வுகள் பலவிதமான விரயங்கள் செலவு ஏற்பட காரணங்கள் மோட்சம் கிடைக்கும் யோகம் உண்டா அடுத்த பிறவியில் பிறக்கும் இடம் வாழும் தன்மை மேலும் வெளிநாட்டு வாழ்க்கையில் ஏற்படும் உயர்வுகள் மற்றும் தீமைகள் முதுமை காலத்தில் எங்கு நிலையாக வாழ்வார் நிம்மதியான தூக்கம் அமையுமா படுக்கையறை யோகங்கள் யாகங்கள் பல செய்யும் யோகம் புண்ணிய காரியங்களுக்கு செலவிடுவது இடது கண் நோய்கள் கால் பாதங்களில் ஏற்படும் நோய்கள் பூமிக்கு கீழ் பகுதி ஆராய்ச்சி இவைகளை கூறுவது.

சிறப்புக் காண்டங்கள்:

13.சாந்தி காண்டம்:
முற்பிறவியில் பிறந்த இடம் செய்த நன்மை தீமைகள் அதனால் தற்போது அனுபவிக்கும் கஷ்டங்கள் அதை நீக்குவதற்குரிய பரிகாரங்கள்.


14.தீட்சை காண்டம்:
மந்திரத்தை பற்றி கூறுவது எந்த மந்திரத் தாயத்து செய்து அணிந்து கொண்டால் தன்னுடைய காரியங்கள் மற்றும் குடும்பத்தினர் காரியங்கள் வெற்றி அடையும் என்பதையும் தீய சக்திகள் மற்றும் தீய கனவுகளில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை கூறுவது


15.ஔஷதக் காண்டம்:
மருந்துகளைப் பற்றி கூறுவது தீராத நீண்ட கால நோய்களுக்கு எந்த மருந்து அல்லது மூலிகை சாப்பிடலாம் என்பதையும் சாப்பிடும் வழிமுறைகளை கூறுவது.


16.தசா புத்தி காண்டம்:
வாழ்க்கையில் தற்போது நடக்கும் தசை மற்றும் புத்திகள் பற்றியும் மேலும் நடக்கவிருக்கும் தசா புத்தி களை பற்றியும் அதற்கான பலன்களை விரிவாகவும் விளக்கமாகவும் கூறுவது.


17.தசா புத்தி சாந்தி காண்டம்:
தற்போது நடக்கும் தசா புத்திகள் மேலும் நடக்கவிருக்கும் தசா புத்திகளில் ஏற்படும் தோஷங்களுக்கு விரிவான தோஷ நிவர்த்திகளை கூறுவது இதில் ஒவ்வொரு தசா மற்றும் புத்திகளுக்கு தனித்தனியாக சாந்தி வழிமுறைகள் கூறப்படும்.


18.பொது வாழ்வு (அரசியல்) காண்டம்:
பொது வாழ்வில் (அரசியல்) கிடைக்கும் புகழ் வெற்றி பதவி நன்மை தீமைகள் பற்றியும் இவைகள் கிடைக்கும் கால கட்டங்கல் பற்றி விரிவாக கூறுவது.


மேலும்:
19. ஞான காண்டம், 20.நாடி மூலம் ஆருடம் (பிரசன்னம்) காண்டம், 21.ஆத்ம சாந்தி காண்டம், 22.நடைமுறை காண்டம், 23.நடைமுறை குடும்ப காண்டம், 24.சூட்சும காண்டம், 25.சூட்சும குடும்ப காண்டம், 26.அதி சூட்சும நாடி, 27.சூட்சும சூட்சும நாடி